47 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா.. டெல்லியை வீழ்த்தி ஆர்சிபி 2வது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நான்காவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும் ஆர்சிபி அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆர் சி பி மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் மேக் லெனின் 17 ரன்களும் சிபாலி வர்மா, டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதை அடுத்து, மூன்றாவது வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார்.
22 பந்துகளில் எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதேபோன்று அண்ணாபால் சதர்லேண்ட் 19 ரன்களும், மர்சியானி கேப் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சாரா 23 ரன்கள் சேர்க்க மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.இதனால் டெல்லி அணி 19.3 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
ஆர்சிபி பந்துவீச்சு தரப்பில் ரேணுகா சிங், ஜார்ஜியா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கிம் மற்றும் ஏக்தா பிஸ்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி மகளிர் அணி களம் இறங்கியது.
தொடக்க வீராங்கனையாக விளையாடிய ஆர் சி பி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு டானி வியாட் நல்ல கம்பெனி கொடுத்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி வீராங்கனைகள் தடுமாறினர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 47 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டர்களும், மூன்று சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 172 என்று அளவில் இருந்தது.டேனி வியாட் 42 ரன்கள் சேர்க்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 16.2 ஓவர்கள் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் புள்ளி பட்டியல் தற்போது ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டுமே வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. குஜராத் அணி 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மும்பை மற்றும் உபி ஆகிய அணிகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.