35 ஆண்டு கால உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்த இலங்கையின் அறிமுக வீரர் ..!

35 ஆண்டு கால உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்த இலங்கையின் அறிமுக வீரர் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் ஒரு பலம் இழந்த இளம் அணியாக இலங்கை அணி குசல் பெரேரா தலைமையில் விளையாடியது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் அறிமுகமான இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண அணியை வழிநடத்்திய இலங்கை இளம் சகலதுறை வீரர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

நேற்று சரித் அசலங்க தன்னுடைய 24வது பிறந்த நாளை கொண்டாடியதுடன் சர்வதேச போட்டிகளில் இலங்கை சார்பில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

தன்னுடைய பிறந்த நாளிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை மேற்கொள்வது என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய வரம் எனலாம்.

அந்த வரத்தை சரியாகப் பயன்படுத்தாத நிலையிலேயே இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தார் அசலங்க.

35 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் ஒருவர் தன்னுடைய பிறந்த நாளில் அறிமுகமாகி போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தார், அதற்கு பின்னர் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று அறிமுகமாகி டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தவர் அசலங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.