விம்பிள்டன் முதல் சுற்றிலிருந்து காயத்தினால் வெளியேறினார் செரீனா
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் , விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சுற்றுப் போட்டியிலிருந்து காயம் காரணமாக கண்ணீருடன் விலகினார் .
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை ஆலியாக்சான்ட்ரா சஸ்னோவிச்சுடன் செரீனா வில்லியம்ஸ் மோதினார் .
இப்போட்டியின் முதல் செட்டில் 3-3 எனும் நிலையில் இருந்தபோது , ஆடுகளத்தில் கால் சறுக்கிய செரீனா அத்துடன் போட்டியிலிருந்து விலகினார் .
39 வயதான செரீனா வில்லியம்ஸ் ( Serena Williams ) இம்முறை விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் சம்பியனாகுவதன் மூலம் தனது 8 ஆவது விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை வெல்வதுடன் , 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமப்படுத்தவும் திட்டமிட்டிருந்தார் .
ஆனால் , ஆடுகளத்தில் சறுக்கியதால் வலது காலில் காயம் காரணமாக அவர் கண்ணீருடன் ஓய்வு பெற்றார் அவர் ஆடுகளத்திலிருந்து வெளியேறியபோது , அரங்கிலிருந்து எழுந்துநின்று மரியாதை செய்தனர் .