இலங்கை உலக சாதனை – இங கிலாந்துக்கு தொடர் வெற்றி …!

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் உலக சாதனையை முறியடித்து இலங்கை சாதனை . 

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 வது போட்டி நேற்று நிறைவிற்கு வந்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் தொடரை வென்றது.

இன்றைய தோல்வி மூலமாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் அகராதியில் விரும்பத்தகாத ஓர் சரித்திர சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது .

இதுவரைக்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி காணப்பட்டது..

இந்திய கிரிக்கெட் அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இன்று  860 வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 428 வது தோல்வியை பெற்றுக்கொண்டு, இந்தியாவின் உலக சாதனையை முறியடித்தது .

இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணிக்கு தனன்ஜய டீ சில்வா 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய் , ஜோ ரூட் , மோர்கன் ஆகியோர் அரைச்சதமடித்து அசத்த 43 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து போட்டியில் இலகு வெற்றி பெற்றது.

428 – SRI LANKA ?? **(தோல்விகள்)
427 – India ?
414 – Pakistan ??️
384 – West Indies ?️
375 – Zimbabwe ??
374 – New Zealand ??
339 – England ???????
333 – Australia ??
245 – Bangladesh ??
218 – South Africa ??

#ENGvSL

Result summary
Team Mat Won Lost Tied NR %
Afghanistan 2009-2021 129 62 63 1 3 49.6
Africa XI 2005-2007 6 1 4 0 1 20
Asia XI 2005-2007 7 4 2 0 1 66.66
Australia 1971-2020 955 579 333 9 34 63.35
Bangladesh 1986-2021 385 133 245 0 7 35.18
Bermuda 2006-2009 35 7 28 0 0 20
Canada 1979-2014 77 17 58 0 2 22.66
East Africa 1975-1975 3 0 3 0 0 0
England 1971-2021 756 380 339 9 28 52.81
Hong Kong 2004-2018 26 9 16 0 1 36
ICC World XI 2005-2005 4 1 3 0 0 25
India 1974-2021 993 516 427 9 41 54.67
Ireland 2006-2021 167 70 86 3 8 44.96
Kenya 1996-2014 154 42 107 0 5 28.18
Namibia 2003-2020 14 5 9 0 0 35.71
Nepal 2018-2020 10 5 5 0 0 50
Netherlands 1996-2021 85 34 47 1 3 42.07
New Zealand 1973-2021 775 354 374 7 40 48.63
Oman 2019-2020 11 8 3 0 0 72.72
Pakistan 1973-2021 933 490 414 9 20 54.16
Papua New Guinea 2014-2019 27 7 20 0 0 25.92
Scotland 1999-2021 117 43 67 1 6 39.18
South Africa 1991-2021 628 386 218 6 18 63.77
Sri Lanka 1975-2021 860 390 428 5 37 47.74
United Arab Emirates 1994-2021 61 18 43 0 0 29.5
United States of America 2004-2020 15 6 9 0 0 40
West Indies 1973-2021 828 404 384 10 30 51.25
Zimbabwe 1983-2020 532 138 375 8 11 27.25