Euro 2020: அரை இறுதியில் Denmark, ஏமாற்றத்துடன் விடை பெற்றது செக்குடியரசு.
Euro 2020 இன் 3 ஆவது காலிறுதி போட்டியில் Denmark 2-1 வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 1992 இன் பின்னர் முதல் முறையாக Denmark Euro கிண்ண அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Denmark மற்றும் Czech Republic என இரு அணிகளுமே இம்முறை ரசிகர்களை கவர்ந்திருந்த போதிலும் Czech Republic காலிறுதியுடன் விடை பெற்றது.
இப் போட்டியில் Patrick Schick ஒரு கோல் அடித்து Euro 2020 இல் 5 ஆவது கோல் அடித்து Ronaldo இன் சாதனையை சமன் செய்தார்.