5 ஓட்டங்களில் புதிய உலக சாதனையை கோட்டைவிட்ட ஜோ ரூட்…!

100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் ஜோ ரூட் 5 ஓட்டங்களில் புதிய உலக சாதனையை ஒன்றை நழுவ விட்டுள்ளார்.

100 வது டெஸ்ட்டில் விளையாடும் போது அதிக ஓட்டங்களை பெற்றவர் எனும் சாதனை முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங் வசம் உள்ளது. அவர் தனது 100 வது டெஸ்ட்டில் இரு இன்னிங்சிலும் சதமடித்து மொத்தமாக 263 ஓட்டங்களை சேர்த்தார்.

ஆனால் ரூட் முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களையும், 2 ம் இன்னிங்சில் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார், இன்னும் 5 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொண்டிங் சாதனை தகர்க்கப்பட்டிருக்கும்.

அத்தோடு இந்தாண்டில் வெறுமெனே 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ள ரூட் 684 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
2006 ம் ஆண்டில் பாகிஸ்தானின் மொஹமட் யூசுப் 1788 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்துள்ளமையே இதுவரையான உலக சாதனையாகும்.

இந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பு ரூட் க்கு அருமையாக காணப்படுகின்றது.

ENG-119/5

Lead-360

Tea Break. (2.20 PM)