5 போட்டிகள் -5 தோல்விகள் -5 கிண்ணங்கள் _ எங்கே செல்லும் இந்தப் பாதை ?

ஐபிஎல் கிரிக்கெட் – 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 52 ரன், தவான் 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 28 ரன்னிலும், இஷான் கிஷன் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய பிரெவிஸ், திலக் வர்மா ஜோடிஅதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. பிரெவிஸ் 49 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 36 ரன்னும், பொலார்டு 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக போராடி சிக்சர், பவுண்டரிகளை விளாசி 43 ரன்னில் வெளியேறினார். உனத்கட் 12 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் 3வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் ஒடியன் ஸ்மித் 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

5 போட்டிகள் –

5 தோல்விகள் –

5 கிண்ணங்களை IPL வரலாற்றில் கொண்டு வெற்றிகரமான அணியாக திகழும் மும்பைக்கு ஏன் இந்த நிலை,  எங்கே செல்லும் இந்தப் பாதை என்றி ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர் !

#Abdh