5 வது ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் பங்கேற்று கலக்கும் பிரேசிலின் சிங்கப்பெண்…!

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திரம் மார்ட்டா தனது பெயரை மற்றொரு சாதனை புத்தகத்தில் செதுக்கியுள்ளார்.

சீனாவை எதிர்த்து பிரேசில் 5-0 என்ற கணக்கில் வென்றது, போட்டியில் இரு கோல்களை அடித்த பின்னர் மார்ட்டா புதிய சாதனை நிலைநாட்டினார்,

தொடர்ச்சியாக ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று கோல் அடித்த முதல் பெண் கால்பந்து வீராங்கனை என்ற பெருமையை மார்ட்டா பெற்றுக்கொண்டார்.

போட்டியில் கோல் அடித்த பிறகு மார்ட்டா தனது கைகளால் ஒரு “T” வடிவத்தை உருவாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

 தேசிய அணியுடனான தனது 160 ஆட்டங்களில் பிரேசிலுக்கு மார்ட்டாவின் 110 , 111 வது கோல்களை இந்த ஒலிம்பிக்கில் பதித்தார்.

ஆறு முறை ஃபிஃபா ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை பட்டம் வென்ற மார்ட்டா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார்.

தனது ஐந்தாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மார்ட்டா ஒரு தங்கப் பதக்கம். 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பிரேசில் அணிக்கு வெள்ளி வென்று கொடுத்துள்ளார், ஆனால் கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பிரேசில் பதக்கம் பெறவில்லை.

பிரேசில் அணிக்கும் சிங்கப்பெண் மார்ட்டாவுக்கும் வாழ்த்துவோம்.