50 ஆண்டுகளாக இல்லாத புதிய சாதனைப் பட்டியலில் இணைந்து கொண்ட ஜோ ரூட்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவிலான ஓட்டக் குவிப்புக்களை மேற்கொண்டு வருகிறார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இதன் மூலமாக 53 ஆண்டுகளுக்கு பின்னரான கிரிக்கட் சரித்திரத்தில் ஒரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
இங்கிலாந்து எத்தனையோ டெஸ்ட் ஆட்டக்காரர்களை கண்டாலும் ,அவர்கள் எவரும் கடந்த 53 ஆண்டுகளாக டெஸ்ட் சராசரி 50 வீதத்தை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் தலைவர் ஜோ ரூட் தற்போது 53 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் ஆட்டக்காரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் 50 ஐ கடந்த சராசரிக்குரிய அபூர்வ சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இறுதியாக இங்கிலாந்தின் கென் பாரிங்டன் 1968 ம் ஆண்டில் டெஸ்ட் சராசரியாக 58.7 கொண்டிருந்தார்்்
50 ஐ கடந்த சராசரி பேணிய இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் விபரம்.
ஜாக் ஹாப்ஸ்: 56.5 (1930)
ஹெர்பர்ட் சட்கிளிஃப்: 60.7 (1935)
வாலி ஹம்மண்ட்: 58.5 (1947)
டெனிஸ் காம்ப்டன்: 50 (1957)
லென் ஹட்டன்: 56.7 (1965)
கென் பாரிங்டன்: 58.7 (1968)
ஜோ ரூட்: 50.4 (2021)
ரூட் 1968 க்குப் பிறகு 53 ஆண்டுகள் கடந்து இங்கிலாந்து டெஸ்ட் வீரர் ஒருவர் சராசரியாக 50 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.