50 ஓவர் போட்டி ஒன்றில் 500 ஓட்டங்களை கடந்து திசர பெரேராவின் அணி இமாலய சாதனை !

இலங்கையில் பாதுகாப்பு படையினரின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் திஸர பெரேரா தலைமையிலான ராணுவ அணி அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது .

கடல்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான இந்த போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான அணி 50 ஓவர்கள் நிறைவில் 4விக்கெட்டுகளை இழந்து 514 ஓட்டங்களை குவித்தது.

இந்த போட்டியில் அசேல குணரத்ன 38 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ,திஸர பெரேரா (52 பந்துகளில் 110 ஓட்டங்கள்) அதிரடியாக சதம் விளாசியமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு ஆடிய கடற்படை அணி 56 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ,திசர பெரேரா தலைமையிலான ராணுவ அணி 458 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

Previous article#RRvKKR -இறுதி இடத்துக்கான போட்டி இன்று..! (மீம்ஸ்)
Next articleசஞ்சு சம்சன் இன் பொறுமையான ஆட்டம் -கல்கத்தாவை இலகுவாய் பந்தாடியது ராஜஸ்தான்!