LPL போட்டிகளில் பங்களாதேஸ் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்…!

லங்கா பிரீமியர் லீக் 2 இன் வரைவில் பெயரிடப்பட்டுள்ள பங்களாதேஸ் அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணியின் போட்டிகள் காரணமாக ஆரம்பத்திலிருந்து LPL போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

எல்பிஎல் இந்த ஆண்டு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை இலங்கையில் நடைபெற உள்ளது, பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆகஸ்ட் 2 முதல் 8 வரை டாக்காவில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் நடைபெறவிருக்கும் டி 20 உலக கிண்ண போட்டிகளும் இருக்கின்றன.

பங்களாதேஷின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால், மஹ்முதுல்லா, மெஹிடி ஹசன், டாஸ்கின் அகமட் , லிட்டன் தாஸ் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகியோர் எல்பிஎல் போட்டிகளுக்காக பதிவு செய்துள்ளனர்.

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் எ இருப்பதால் அவர்கள் (பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்) எல்பிஎல் ஆரம்பத்திலிருந்து கிடைக்க மாட்டார்கள்” என்று BCB கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் சனிக்கிழமை  உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் மற்ற தொடர்களையும் வரிசையாகக் கொண்டுள்ளோம், ஆனால் இடையில், எங்களுக்கு சிறிது காலம்  இருக்கிறது, அவர்கள் அந்த இடத்தில் சென்று LPL விளையாடலாம்,” என்று அவர் கூறினார்.

தேசிய கடமைக்கு வீரர்கள் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒப்பந்தங்களையும் அக்ரம் மேற்கோள் காட்டினார். இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக இலங்கை டெஸ்ட் சுற்றுப்பயணத்திலிருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியதை அடுத்து BCB சில நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த வீரர்களின் பெயர்களை பிசிபி இன்னும் வெளியிடவில்லை, 18 பேருக்கு வருடாந்த ஒப்பந்தம் கிடைக்கும் என்று அறியப்படுகிறது.

“அனைத்து கிரிக்கெட் வீரர்களும் எல்.பி.எல் இல் விளையாட நேரம் இருந்தால் அவர்கள் அங்கு விளையாடுவார்கள், ஆனால் எந்தவொரு தேசிய கடமையையும் தவிர்ப்பதற்கான அனுமதி இல்லை என்று அவர் கூறினார்.

இவரது கருத்துக்கள் படி LPL போட்டிகளில் பங்களாதேஷ் வீர்ர்களால் இலங்கையின் LPL போட்டிகளுக்கு முழுமையான பங்களிப்பு கிடைக்காது என்றே நம்பப்படுகிறது.