6 ஆண்டுகள் -9 தலைவர்கள் -எங்கே செல்லும் இந்தப் பாதை …!

இலங்கை கிரிக்கெட் அணியின் வங்கதேச கிரிக்கெட் சுற்றுப்பயணம் நிறைவுக்கு வந்திருக்கிறது. அடுந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் பிரமோதய விக்ரமசிங்க அண்மையில் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் குசல் பெரேராவினுடைய தலைமைத்துவமும் தொடர்பில் இரண்டு தொடர்களில் நாங்கள் பரீட்சித்துப் பார்ப்போம், பொருத்தமாக இருந்தால் அவரை நீண்ட கால அடிப்படையில் தலைமைத்துவத்தில் தொடர அனுமதி வழங்குவோம், இல்லையேல் மாற்றத்திற்கு நாங்கள் செல்ல நேரிடும் எனும் கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்த பின்னர் இலங்கை அணியின் ஒன்பதாவது தலைவராக ஒருநாள் போட்டிகளில் குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிக தலைவர்களை ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்திய அணியாக இலங்கை அணி திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக தலைவர்களையும் பயன்படுத்திய அணிகளின் விபரத்தை தருகின்றோம் ????

இலங்கை-9

பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ,சிம்பாவ்வே -7

அவுஸ்ரேலியா -6

மேற்கிந்திய தீவுகள்-5

இந்தியா ,நியூசிலாந்து,ஆப்கானிஸ்தான் -4

பங்களாதேஸ், இங்கிலாந்து -3

சிலவேளைகளில் இங்கிலாந்து தொடருக்குப் பின்னர் 10 வது தலைவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.