6 சிக்ஸர்கள்- உலக சாதனை படைத்த பொல்லார்ட்…!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இன்று ஆரம்பமான T20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கிரண் பொல்லார்ட் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனன்ஜயவின் ஒரே ஓவரில் பொல்லார்ட் 6 சிக்ஸர்களை விளாசியாமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்னர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் ஹிப்ஸ் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவர்களை அடுத்து பொல்லார்ட் இந்த பட்டியலில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முன்னதாக அகில தனன்ஜய ஹட்ட்ரிக் சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 41 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

வீடியோ இணைப்பு.