6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு அதிசய சாதனை நிகழ்த்திய யுவ்ராஜ்..!(காணொளியை பாருங்கள்)

6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு அதிசய சாதனை நிகழ்த்திய யுவ்ராஜ்.!(காணொளியை பாருங்கள்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டி தொடரின் மிக முக்கியமான போட்டியில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், 6 பந்துகளில் 6 சிக்சர்களை பெற்ற உலகின் முதல் வீரராக, ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிசய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

அதற்கு முந்தைய ஓவரில் பிளின்டப் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டது, அந்த கோபத்தில் இருந்த யுவராஜ் அடுத்த ஓவரை வீசிய இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ரோட் உடைய ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அதிசய சாதனை நிகழ்த்தினார்.

அத்தோடு 12 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு விரைவான அரைச்சதம் என்ற சாதனையையும் நிலைநாட்டினார்.

இதுவரைக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் நால்வர், டுவென்டி டுவென்டி போட்டிகளில் யுவராஜ் சிங்கை தொடர்ந்து இலங்கைக்கு எதிராகக் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட அந்த காணொளியை பாருங்கள் ???

2007 ஆம் ஆண்டு இதே தினத்தில் (செப் 19) அந்த சாதனை படைக்கப்பட்டது.