6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து அபார சதத்துடன் கூடிய அமெரிக்க வீரரின் அரிய சாதனை..!
அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி தொடர்பில் அண்மைக்காலமாக பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதோடு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
அமெரிக்க அணி ,வெளிநாட்டு வீரர்களை தங்கள் கிரிக்கெட் அணிக்குள் கொண்டுவர எடுத்துக்கொண்ட முயற்சிகளே இதற்கான பிரதானமான காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் மிக அபாரமான அரிய சாதனையை மல்கோத்ரா எனும் வீரர் படைத்திருக்கிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார், இது மட்டுமல்லாமல் அந்த போட்டியில் மொத்தம் 16 சிக்சர்கள் விளாசி மல்கோத்ரா என்ற வீரர் ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு வீரர் பெற்ற முதல் சதம் என்கிற சாதனையையும் இந்த வீரருக்கு சொந்தமானது, அத்தோடு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஹேர்ஷல் கிப்ஸ் க்கு அடுத்து 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து வீரர் என்ற சாதனையையும் இவர் தனதாக்கினார்.
அதோடு சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய நான்காவது வீரர் என்ற பெருமையும் மல்கோத்ராவுக்கு கிடைத்தது.
மிகப் பிரகாசமான எதிர்காலம் மல்கோத்ராவுக்கு காணப்படுகின்றது.
வீடியோ இணைப்பு ???
?WATCH! 6⃣6⃣6⃣6⃣6⃣6⃣
Jaskaran Malhotra makes history in Oman becoming just the 4th international cricketer after @hershybru @YUVSTRONG12 and @KieronPollard55 to hit 6⃣ x 6⃣'s in an over in his record-breaking innings of 1️⃣7️⃣3️⃣* vs Papua New Guinea today#WeAreUSACricket?? pic.twitter.com/eZrMM9PLFS
— USA Cricket (@usacricket) September 9, 2021