600 மில்லியன் இழப்பீடு கோரும் குசல் மெண்டிஸ்…! என்ன காரணம் தெரியுமா ?

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிசுக்கு எதிராக இலங்கையின் ஒரு செய்திபத்திரிகை அவதூறான கட்டுரைகளை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவதூறு கட்டுரைகளை வெளியிட்டதற்காக குறித்த செய்தித்தாளில் இருந்து இழப்பீடு கோரி மெண்டிஸ் தாக்கல் செய்த வழக்கில் மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்தூன் விதானா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குசல் மெண்டிஸ்,குறித்த செய்தித்தாளின் ஆசிரியர் பிரபாத் சஹாபந்துவிடம் இருந்து 600 மில்லியன்  இழப்பீடு கோரியுள்ளார், அத்தோடு மெண்டிஸ் சம்பந்தப்பட்ட ஒரு வாகன விபத்து தொடர்பான அவதூறு கட்டுரைகளை வெளியிட்டதற்காக இளங்கியின் பிரபல விளையாட்டு கட்டுரையாளர் ரெக்ஸ் கிளெமெண்டைன் எனும் ஊடகவியளாலரையும் இந்த வழக்கில் இணைத்துள்ளார்.

இந்த வழக்கு மே 19 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கை கிரிக்கெட்டின் மீதான அல் ஜசீராவின் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு- ICC அறிக்கை…!
Next articleஅவுஸ்ரேலியர்களின் பந்தை சேதப்படுத்திய விவகாரம் -உண்மையை போட்டுடைத்த ஆடம் கில்கிறிஸ்ட்…!