7 மைதானங்கள், 7 சதங்கள்,  3 ஆண்டுகளில் ரோகித்தின் அபார சாதனைகள்..!

7 மைதானங்கள், 7 சதங்கள்,  3 ஆண்டுகளில் ரோகித்தின் அபார சாதனைகள்..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று (4) ஓவல் மைதானத்தில் நான்காவது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, ஏராளமான புதிய சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 15,000 சர்வதேச ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ரோகித் சர்மா, ஆரம்ப வீரராக 11,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இது மாத்திரமல்லாமல் 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருக்கும் ரோகித் சர்மா, இந்த ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இப்படி ஏகப்பட்ட சாதனைகளை ஒரே போட்டியில் கடந்திருக்கும் ரோகித் சர்மா இன்னுமொரு அரிய சாதனைைக்கும் சொந்தக்காரரானார்.

இங்கிலாந்தில் 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் 7 மைதானங்களில் 7 சதம் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது, அத்துடன் ட்வென்டி ட்வென்டி, ஒரு நாள், டெஸ்ட் போட்டிகள் என்று அனைத்து வகையான ஆட்டங்களிலும் இங்கிலாந்தில் சதம் விளாசிய ஒரே ஆரம்ப வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா வசமானது.

எட்க்பாஸ்டன் ✅

பிரிஸ்டல் ✅

லீட்ஸ் ✅

மான்செஸ்டர் ✅

சவுத்தாம்ப்டன் ✅

நாட்டிங்ஹாம் ✅

கென்னிங்டன் ஓவல் ✅

ஆகிய மைதானங்களில்  ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் போது அந்த தொடரில் மட்டும் 5 சதங்கள் விளாசியுள்ளார்,  இது மாத்திரமல்லாமல் இங்கிலாந்து மண்ணிலேயே ரோகித் சர்மா அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் பிரட்மன் (11) , விவியன் ரிச்சர்ட்ஸ் (9) ஆகியோரை அடுத்து மொத்தம் இங்கிலாந்து மண்ணில் 9 சதம் விளாசி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.