இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ரூட் இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.
முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இந்தியாவுக்கு மத்திய வரிசை ஏமாற்றம் கொடுத்தது. 2 ம் நாளில் போட்டி ஆரம்பித்து 7 பந்துகள் இடைவெளியில் ராகுல் , ரஹானே ஆகியோர் ஆட்டமிழக்க இந்தியா 364 ஓட்டங்களில் அனைத்து விக்கட்களையும் இழந்தது்.
இந்த போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றிய அன்டேர்சன் புதிய சாதனை படைத்தார். கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வயது முதிர்ந்த வீரர் ஒருவரின் 5 விக்கட் பெறுதியாக இது அமைந்துள்ளது.
இந்த 5 விக்கட் சாதனை படைக்கும் போது அன்டேர்சனின் வயது 39 வருடமும் 14 நாட்களுமாகும். இது மாத்திரமல்லாமல் அவரது முதலாவது 5 விக்கட் பெறுதிக்கும் நேற்றைய 31 வது 5 விக்கெட் பெறுதிக்கும் இடையில் இடைப்பட்ட காலம் 18 வருடங்களாகும் , இதன்மூலமாக 18 ஆண்டுகளாகியும் கிரிக்கெட்டில் அதே பொலிவோடு அன்டேர்சன் ஜொலித்துக் கொண்டேயிருக்கிறார் எனலாம்.