76 வயதில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த பாகிஸ்தான் கிரிகெட் வீரர் அசார் அலியின் தந்தையார் -குவியும் பாராட்டுக்கள்
பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அசார் அலியின் தந்தை முஹம்மது ரபீக் ஷேக்புரா 21 KM மராத்தான் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
76 வயதான ரபிக் ஒரு விளையாட்டு வீரர் மற்றும் பல்வேறு மராத்தான்களிலும் பங்கேற்றுள்ளார் என்பது முக்கிய விடயம், அவர் தொடர்ந்து ஆரோக்கியத்தை பேணுவதற்காக ஒவ்வொரு நாளும் ஓடி உடற்பயிற்சி மேற்கொள்பவர்.
76 வயதிலும் மிகச்சிறந்த தேக ஆரோக்கியம் கொண்டு, ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி மேற்கொண்டு இந்த மாதிரி ஓடுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அசார் அலியின் தந்தையாருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
இது தொடர்பில் அசார் அலி தன்னுடைய டுவிட்டர் தளத்தில் தந்தையார் ஓடி வெற்றி அடைகின்ற காணொளியை பகிர்ந்துள்ளார்.
MashA Allah Abu G so proud to be your son… ❤️❤️ https://t.co/yxmTNA6WMn
— Azhar Ali (@AzharAli_) September 30, 2021