இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கத்தை பெற்று இந்தியாவுக்கு நம்பிக்கை சேர்த்தனர்.
ரோஹித் மற்றும் ராகுல் ஜோடி லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை 100 ரன்கள் தொடக்க விக்கட்டுக்காக சேர்த்து டெஸ்டில் இந்தியாவுக்கான 69 ஆண்டு கால சாதனையை முறியடித்தனர்.
ரோஹித் மற்றும் ராகுல் முதல் விக்கெட்டுக்கு அபாரமான 126 ரன்கள் சேர்த்தனர்.
லோர்ட்ஸ் மைதானத்தில் மேகமூட்டமான சூழ்நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5 போட்டிகள் கொண்ட தொடரின் இந்த இரண்டாவது போட்டியில் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
ராகுல் மற்றும் ரோகித் எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 15 ஓவர்களில் பந்தை நன்றாக வெளியில்விட்டு (Leace) தடுமாற்றமின்றி சுதந்திரமாக ஸ்கோர் செய்ய ஆரம்பித்தனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட் மற்றும் சாம் குர்ரான் போன்றோருக்கு எதிராக கட்டுப்பாட்டில் ஆடினார். இதனால் 1952 க்குப் பிறகு முதல் முறையாக லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் முதல் 100 ரன்களை இந்த ஜோடி கொண்டு வந்தது.
இங்கிலாந்து பந்துவீச்சை திணறடித்த இந்தியர்கள், லோர்ட்ஸ் மைதானத்தில் அபார ஆரம்பம்…!
வினூ மங்கட் மற்றும் பங்கஜ் ராய் ஆகியோர் ஹோம் ஆஃப் கிரிக்கெட்டில் (Lords Ground) ஒரு டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள் இணைப்பாட்டம் பெற்ற கடைசி இந்திய தொடக்க ஜோடியாகும்.
1952 இல் இங்கிலாந்துக்கு எதிராக 106 ரன்கள் தொடக்க இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
இதனை இந்த போட்டியில் ரோஹித் ,ராகுல் ஜோடி முறியடித்துள்ளது.