8 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான சாதனையை பதிவு செய்த இலங்கை அணி- இலங்கைக்கு எங்கே சிக்கல் இருக்கிறது தெரியுமா (புள்ளி விபரங்களுடன்)

8 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான சாதனையை பதிவு செய்த இலங்கை அணி- இலங்கைக்கு எங்கே சிக்கல் இருக்கிறது தெரியுமா (புள்ளி விபரங்களுடன்)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருக்கிறது.

இலங்கையின் கிரிக்கெட் சரித்திரத்தில் T20 போட்டிகளில் சொந்த மண்ணில் இலங்கை பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை 103 ஓட்டங்களாகும்.

2003ஆம் ஆண்டு இதே ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை 103 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் குறைந்த ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை இலங்கை சமப்படுத்தியிருக்கிறது.

இலங்கையை பொறுத்தவரையில் முதலாவது போட்டியில் மொத்தம் 49 பந்துகளில் (Dot Ball) இலங்கை எதுவிதமான ஓட்டங்களையும் பெறவில்லை.   இன்றைய போட்டியில் 51 பந்துகளில் இலங்கை Dot Ball களாக ஓட்டம் பெறாது தடுத்து ஆடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகள் என்றால் கூட பரவாயில்லை, 120 பந்துகள் வீசப்படும் டுவென்டி டுவென்டி போட்டிகளில் 50 பந்துகளுக்கு அதிகமாக Dot Ball விடுவது என்பது இலங்கையின் மோசமான துடுப்பாட்ட தரத்தில் இருக்கிறது என்பதற்கு சான்றாகும். .

இந்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி ,14.1 வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2 க்கு 0 என்று கைப்பற்றியுள்ளது.