8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டுமொரு கால்பந்து உலக கிண்ண தொடரில் அர்ஜென்டினா…!

8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டுமொரு கால்பந்து உலக கிண்ண தொடரில் அர்ஜென்டினா…!

கட்டாரில் இடம்பெற்ற வருகின்ற கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் இன்று இடம்பெற்ற மிக முக்கியமான அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி குரோசிய அணியை தோற்கடித்து உள்ளது.

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக்கினார், இதன் பின்னர்  முதல் பாதி ஆட்டத்தில் இன்னுமொரு அருமையான ஆட்டம் மூலமாக Alverez இன்னுமொரு கோல் பெற்றுக்கொண்டு அர்ஜென்டினா முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்கின்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது.

குரோசிய அணியினர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் பெறுவதற்கான முயற்சிகளை மூர்க்கத்தனமாக மேற்கொண்டாலும் கூட வாய்ப்புகள் பலனளிக்கவில்லை.

இறுதியில் போட்டியில் 3-0 என்கின்ற அடிப்படையில் வெற்றி பெற்று கால்பந்து உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்கின்ற பெருமையை அர்ஜெண்டினா பெற்றுக்கொண்டது.

கடந்த முறை ரஷ்யாவில் இடம்பெற்ற கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் குரோசிய அணி, பிரான்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில் இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான முனைப்பு அவர்களுக்கு கை கூட வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

குழு நிலை ஆட்டத்தில் அதிர்ச்சிகரமாக சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவினாலும் கூட அதன் பின்னர் வந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று அவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி  காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அனியுடன் வெற்றி பெற்று இப்போது அதையும் கடந்து மெஸ்ஸி தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சு மற்றும் மொராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுகின்ற அணி அர்ஜென்டினாவை இறுதி போட்டியில சந்திக்கும் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

2004 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவிய நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு…!