8 கோடிக்கு மேல் கொடுத்து எதற்கு எடுத்தார்கள்- மும்பை நிர்வாகம் மீது வசீம் ஜபார் சீற்றம்…!

பல கோடி கொடுத்து அந்த வீரரை வாங்கியது இதற்காகவா. மும்பை அணி மீது முன்னாள் வீரர் அதிருப்தி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மும்பை அணி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் ரூ 8.5 கோடி ரூபாய் கொடுத்து டிம் டேவிட்டை மும்பை அணி வாங்கியது. 4 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகும் அவருக்கு மும்பை அணி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் வாசிம் ஜாபர் மும்பை அணி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ” ரூ. 8.5 கோடி ரூபாய் கொடுத்து ஒரு வீரரை வாங்குகிறீர்கள் என்றால், அவர் நிச்சயம் 2 போட்டிகளுக்கும் மேலாக விளையாடும் திறமை படைத்தவராக தான் இருப்பார். டிம் டேவிட்டை மும்பை அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்காதது வியப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிகெட் வீரரான டிம் டேவிட் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர். உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற அவர் கடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரை மும்பை அணி ரூ. 8.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ரூ. 40 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட அவருக்கு, மும்பை அணி கொடுத்த விலை ஏலத்தின் போது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

#Abdh