நேபாள பெண்கள் U-19 ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸால் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்,
டுவென்டி 20 வடிவத்தின் வருகையுடன் கிரிக்கெட் போட்டிகள் குறுகியதாகிவிட்டன, ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெண்கள் 19 வயதுக்குட்பட்ட அணி சனிக்கிழமையன்று விரைவாகவே வீழ்த்தியபோது குறிப்பிடத்தக்க வேகமான வெற்றியைப் பதிவு செய்தஉ சாதனை படைத்தது.
எட்டு ரன்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்ட போட்டியில் ஏழு பந்துகளில் போட்டி முடிவுக்கு வந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீராங்கனை மஹிகா கவுர் (5-2) நேபாளத்தின் பேட்டிங் வரிசையைக் தவிடுபொடியாக்கினார்,
இதனால் UAE யின் தொடக்க ஆட்டக்காரர்கள் தீர்த்த சதீஷ் மற்றும் லாவண்யா கெனி ஆகியோர் 1.1 ஓவரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தமது அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.
நேபாளம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆனால் 8.1 ஓவர்கள் மட்டுமே நீடிக்க முடிந்தது.

YouTube காணொளிகளை பார்வையிடுங்கள் ?
IPL ல் ஒரே அணி வீரர்கள் orange cap , purple cap பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் ?






