வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ராசிக்கார ரிஷப் பான்ட் -மூன்று ஆண்டுகளில் அரிய சாதனை..!

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ராசிக்கார ரிஷப் பான்ட் -மூன்று ஆண்டுகளில் அரிய சாதனை..!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளராக பான்ட அறிமுகமாகி, டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டதன் பின்னர் வெறுமனே 3 ஆண்டுகளில் அரிய சாதனையை படைத்திருக்கிறார்.

வெறுமனே மூன்று ஆண்டுகளில் அதிகமான வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளை பெற்ற ஆசியநாட்டு வீரர் என்ற சாதனையை பான்ட் படைத்திருக்கிறார்.

பான்ட் வெளிநாட்டு மண்ணில் விளைையாடிய 6 டெஸ்ட்டில் இந்திய அணியால் வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

?நாட்டிங்ஹாம் (2018) -அறிமுகம்
?அடிலெய்ட் (2018)
?மெல்போர்ன் (2018)
?மெல்போர்ன் (2020)
?பிரிஸ்பேன் (2021)
?லோர்ட்ஸ் (2021)

ஆசிய நாட்டு வீரர் ஒருவர் SENA எனப்படும் (தென் ஆபிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலிய) ஆகிய வெளிநாட்டு மண்ணில் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட அதிக டெஸ்ட் வெற்றிகள் என்கின்ற சாதனை முன்னர் பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ் வசம் இருந்தது.

வக்கார் யூனுஸ் 5 வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்டார், இறுதியாக இந்திய அணி லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்ற டெஸ்ட் வெற்றியுடன் SENA நாடுகளில் 6 டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்டு பான்ட் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் வெளி நாட்டு மண்ணில் இந்திய அணியின் வெற்றிகளின் பிரதான ராசிக்கார நபராக பான்ட் திகழ்கிறார்.

அடுத்து வரும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு பாண்ட் இன்னும் அரிய சாதனைகள் பலவற்றை முறியடிப்பார் என்று நம்பப்படுகிறது.