9 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான சாதனையை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை எப்போதும் வில்லன்தான்…!

9 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான சாதனையை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை எப்போதும் வில்லன்தான்…!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 59வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி வென்றது.

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி ஒரு மோசமான சாதனையை பதிவு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி 100 ஓட்டங்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்த இரண்டாவது சந்தர்ப்பமாக இது பதிவானது .

ஏற்கனவே 83 ஓட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2013 ல் சென்னை அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது .

9 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்றைய போட்டியில் மீண்டும் ஒரு தடவை 100 ஓட்டங்களுக்குள்ளும் குறைவாக 97 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

ஆக மொத்தத்தில் ஐபிஎல் வரலாற்றில் 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்றைய சென்னை அணியின் தோல்வியோடு ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு கொள்வதற்கான வாய்ப்புகளை முன்னாள் சாம்பியனான சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இழந்து இருக்கின்றன.

கடந்த 6 ஆண்டுகளாக ஐபிஎல் கிண்ணங்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டிருந்த இரண்டு அணிகள் இப்போது வெளியேற்றப்ட்டிபருக்கும் நிலையில் புதிய ஓர் அணி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் சாம்பியன் மகுடத்தை இம்முறை சூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.