9 கோடி கொடுத்து என்னதான் ஆச்சு- தோனியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

9 கோடி கொடுத்து என்னதான் ஆச்சு- தோனியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

நேற்றெ நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ள நிலையில், புதிய வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என நம்பப்பட்டது.

ஆனாலும் சென்னை அணியை பொறுத்தவரை பெரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ளாது பலம்பொருந்திய அணியுடனேயே போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது . கடந்த 2018 ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர் கிருஷ்ணப்பா கௌதம்.

வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இருப்பினும், இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட போட்டிகளில் ஒன்றில் கூட கிருஷ்ணப்பா கவுதமுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


32 வயதான கிருஷ்ணப்பா கௌதமின் பவுலிங் திறன் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய பங்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் முதலிலேயே அவர் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார். இதனால் ஏலத்தில் 9 கோடி கொடுத்து எடுத்து சென்னை ஒரு போட்டியிலும் ஆடவைக்காமை எல்லோருக்கும் ஏமாற்றமே.

டெல்லி அணியுடன் குவாலிபியர் ஆட்டத்திலோ அல்லது இறுதி போட்டியிலோ சென்னை விளையாடவும் கூடும் என்பதனால், தமது முழுப்பலத்தையும் சென்னை அணி பரிசீலித்துப் பார்த்ததாகவும் நம்பப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் 9 கோடி பிரயோசனமற்றுப் போயுள்ளது என்பதே உண்மையானது .