நடுவர் பணியை ஏற்ற அணிகளின் பயிற்சியாளர்கள்- இங்கிலாந்தில் விபரீத சம்பவம்..!

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஒரு முக்கியமான ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கட் காப்பாளராக கடமையாற்றியவருமான ஸ்டூவர்ட்,  சர்ரே மற்றும் நார்தாம்ப்டன்ஷயர் அணிகளுக்கிடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் கடமையாற்றிய நடுவருக்கு உடல் நலம் சரியில்லாதுபோக உடனடியாக சர்ரே கழகத்தின் பணிப்பாளராக (Director of cricket ) செயற்பட்டுக்கொண்டிருந்த அலெக் ஸ்டூவர்ட் அம்பயராக கடமையாற்றியமை சுட்டிக்காட்டத்தக்கது

ஆன்-ஃபீல்ட் நடுவர் ரஸ்ஸல் வாரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சர்ரே மற்றும் நார்தாம்ப்டன்ஷயர் இடையேயான போட்டியிலேயே இந்த சம்பவம் பதிவானது.

58 வயதான அலெக் ஸ்டூவர்ட், தனது சர்ரே பயிற்சியாளர் கிட் அணிந்து, பிற்பகல் அமர்வு முழுவதும் ஸ்கொயர்-லெக் அம்பயர் கடமைகளை ஏற்றுக்கொண்டார், இந்த போட்டியில் நார்தாம்ப்டன்ஷயர் 171 ரன்களில் ஆட்டமிழந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு சர்ரேயின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, ​​நார்தாம்ப்டன்ஷயர் தலைமை பயிற்சியாளர் டேவிட் ரிப்லீ ஸ்கொயர்-லெக் அம்பயர் கடமைகளை ஏற்றுக்கொண்டார் .

கிரிக்கெட் களத்தில் இரண்டு Legend கள் நடுவர்களாக கடமையாற்றிய ஒரு விபரீத சம்பவம் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதிவாகியமை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous article2014ம் ஆண்டிற்கு பின்னர் அதிகமான டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட அணிகள்- இந்தியா முதலிடம்..!
Next articleஉலக கிண்ணத்துக்காக ஆஸம் கானைத் தேர்வு செய்தது குறித்து கேள்விக்கணை தொடுக்கும் லத்தீஃப்..!