இறுதி அணியாக இலங்கையின் உலக கிண்ண அணி விபரம் வெளியானது- இரண்டு சிரேஷ்ட வீரர்கள், இரண்டு புதுமுகங்கள்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ணத்திற்கான தங்களுடைய உறுதிப்படுத்தப்பட்ட அணி விபரத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.
செப்டம்பர் 10ஆம் திகதி உலக கிண்ண அணிகளை அறிவிக்க வேண்டிய இறுதி திகதியாக ICC அறிவித்திருந்தாலும் இலங்கை அணி இன்று தங்களது உறுதிப்படுத்தப்பட்ட அணியை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இறுதிப்படுத்தப்பட்ட அணியில் இடம் பிடித்துள்ளனர், இது மாத்திரமல்லாமல் புதுமுகங்கள் மஹீஷ் தீக்ஷ்ன ஆகிய வீரர்கள் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி:
தசுன் ஷானக (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (VC), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, பிரவீன் ஜெயவிக்ரம, நுவான் பிரதீப், லஹிரு மதுஷங்க
மேலதிக வீரர்கள்:
லஹிரு குமார, அகில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ, புலின தரங்க