கரீபியன் பிரீமியர் லீக்கில் சோயிப் மாலிக்கின் மோசமான சாதனைகள்..!

பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2021 இல் மோசமான பின்னடைவை கண்டார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடும் போது சொயிப் மாலிக் 10 ஆட்டங்களில் வெறும் 67 ரன்களையே பெற்றார்.

( 2, 5, 14, 4, 8*, 4, 1, 23, 0, 6)

போட்டியில் அவர் அடைந்த தேவையற்ற சாதனைப் பதிவுகளைப் பாருங்கள்.

மாலிக் ஸ்ட்ரைக் ரேட் 59.82 என்பது டி 20  போட்டியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் (குறைந்தபட்சம் 10 இன்னிங்ஸ்) மிகக் குறைவானதாகும். CPL லில் அவரது மோசமான ஓட்டத்தால், 39 வயதான மாலிக், லிசஸ்டஷைர் அணிக்காக விளையாடிய டைட்டர் க்ளீனை முந்தினார், அவர் 2019 ல் T20Blast போட்டிகளில் 75.61 ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டிருந்தார்.

? டி 20 போட்டிகளில் எந்த ஒரு வீரருடனும் மாலிக்கின் 67 ரன்கள் மிகக் குறைந்ததாகும். முன்னதாக, இந்த சாதனையை முன்னாள் டர்ஹாம் வீரர் வில் ஸ்மித் 2009 ல் டி 20 பிளாஸ்ட் போட்டிகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார்.

? டி 20 லீக் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேன்களுக்குமான குறைந்த சராசரி சோயிப்பின் சராசரி 7.44 ஆகும். 2018 ஆம் ஆண்டு டி 20 பிளாஸ்ட் போட்டிகளில் மிடில்செக்ஸுடன் விளையாடிய நியூசிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபிராங்க்லின் சராசரி 8.38 ஆக காணப்பட்து,

இந்த ஆண்டு CPL போட்டிகளில் பங்கெடுத்த பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக், இந்த அத்தனை மோசமான சாதனைகளிலும் தன் பெயரை பதித்துக்கொண்டார்.

இவரை பாகிஸ்தான் T20 உலகக்கிண்ண அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இப்படி ஓட்டங்கள் குவித்து கொண்டிருக்கும் போது எப்படி தேர்வாளர்கள் இவரை இணைக்பமுடியும் எனும் கேள்வியும் எழாமல் இல்லை.

Previous articleஆப்கான் கால்பந்து அணி பாகிஸ்தானில் குடுப்பத்தோடு தஞ்சம்- அகதி அடைக்கலம்..!
Next articleஇறுதிப் பந்துவரை பரபரப்பை ஏற்படுத்திய கரிபியன் பிரீமியர் லீக்- பிராவோ தலைமையிலான அணி சாம்பியன்..!