ஆரம்ப வீரர்களின் அதிரடியில் ஆர்சிபி அணியை பந்தாடியது கொல்கத்தா ,ஏமற்றினார் ஹசரங்க..!

ஆரம்ப வீரர்களின் அதிரடியில் ஆர்சிபி அணியை பந்தாடியது கொல்கத்தா ,ஏமற்றினார் ஹசரங்க..!

14வது ஐபிஎல் தொடரின் 31வது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி தலைமையிலான RCBஅணி 92 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது .

ஆரம்ப வீரர்களாக படிக்கல் மற்றும் விராட் கோலி இணைந்தனர், தனது 200 வது போட்டியில் ஆடிய கோலி 5 ஓட்டங்கள் பெற்று பிரஷீத் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இன்று ஆர்சிபி அணி சார்பில் ஐபிஎல் அறிமுகம் மேற்கொண்ட இலங்கையின் வணிந்து ஹசரங்க முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், இதேபோன்று முதல் பந்திலேயே டீ வில்லியர்ஸ் ஆட்டமிழந்தமை கவனிக்கத்தக்கது.

இறுதியில் ஆர்சிபி அணி 92 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுகளையும் பறிகொடுத்தது, 93 எனும் இலகு இலக்கு கொல்கத்தாவிற்கு நிர்ணயிக்கப்பட்டது, சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 93 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்கள் இருவரும் அமோகமான ஆரம்பத்தை கொடுத்தனர் .

இன்று அறிமுகத்தை மேற்கொண்ட வெங்கடேஸ் அய்யர் மிகச்சிறப்பாக பந்துகளை பயமற்று எதிர்கொண்டமை கவனிக்கத் தக்கதாக இருந்தது.

ஷூப்மான் கில்லும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாட, 10 ஓவர்கள் மீதமிருக்க ஒரு விக்கெட் இழப்பில் இந்த போட்டியில் மிகச்சிறந்த ஒரு வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

இன்றைய போட்டி கோலிக்கு 200ஆவது போட்டி மட்டுமல்லாது, கொல்கத்தா அணிக்கும் 200 வது ஐபிஎல் போட்டியாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

புள்ளி பட்டியலில் பின்தங்கியிருந்த கொல்கத்தாவிற்கு இன்றைய வெற்றி மிகச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

கோலி தலைமையிலான அணி இன்று விளையாடிய போட்டி எட்டாவது போட்டியாக அமைந்தது, அவர்களுக்கு மூன்றாவது தோல்வி கிடைத்துள்ளது.

இன்று ஐபிஎல் அறிமுகத்தை மேற்கொண்ட இலங்கையின் வணிந்து ஹசரங்க 2 ஓவர்களில் 20 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தமையும் இலங்கையர்களுக்கு கவலையான விஷயமாக அமைந்தது.