விராட் கோலியின் கெத்து இன்னும் குறையவில்லை -நேற்றைய போட்டியில் புதிய மைல்கல்லை எட்டினார், முதல் இந்தியராக சாதனை..!

விராட் கோலியின் கெத்து இன்னும் குறையவில்லை -நேற்றைய போட்டியில் புதிய மைல்கல்லை எட்டினார், முதல் இந்தியராக சாதனை..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் ஐபிஎல்லில் RCB அணியின் தலைவராகவும் விளையாடி வரும் விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளில் மீண்டும் தன்னுடைய துடுப்பாட்ட பலத்தை காண்பித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு விராட் கோலி பெற்றுக்கொண்ட அரைச்சதமும் காரணமாக அமைந்தது, இந்த நிலையில் நேற்று விராட் கோலி ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டினார்.

விராட் கோலி அண்மைக்காலமாக ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறி வரும் நிலையில், அண்மையில் தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் பழைய போர்முக்கு வந்திருக்கிறார்.

இவர் தனது 13-வது ரன்னை கடந்த போது டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது சர்வதேச வீரரானார். இதுவரை விராட் கோலி 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் விளாசியுள்ளார்.

ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கிரிஸ் கெய்ல் (14,275 ரன்கள்), கிரின் பொல்லார்ட் (11,195), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ) ஆகியோர் இம்மைல்கல்லை முன்னர் எட்டிய வீர்ர்களாவர்.

கோலியின் கெத்து இன்னும் குறையவில்லை, சாதனைப்புத்தகம் கோலியின் பெயரை அடிக்கடி அணைத்துக்கொள்கிறது.