ரியல் மாட்ரிட் கால்பந்து கழகத்தின் 34 வயதான தலைவர் செர்ஜியோ ராமோஸ் க்கு சத்திரசிகிச்சை நிறைவு பெற்றுள்ளதாக ரியல் மாட்ரிட் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் “ஸ்பானிஷ் சூப்பர் கப்” இறுதி போட்டியில் கிண்ணம் இழந்ததிலிருந்து அவர் போட்டிகளில் விளையாடவில்லை, இந்த வார தொடக்கத்தில் அவர் பயிற்சிக்கு திரும்பிய போதிலும் அவரது இடது கணுக்கால் உபாதை காரணமாக ஓய்வெடுக்க பணிக்கப்பட்டனர்.
ராமோஸ் எவ்வளவு காலம் ஓய்வில் இருப்பார் என்று அணித்தரப்பு எதனையும் கூறவில்லை, ஆனால் ஸ்பெயின் ஊடகங்கள் அவரை ஆறு முதல் 10 வாரங்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.
அதனால் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகள் மற்றும் லா லிகா தொடரின் பெரும்பகுதியை அவர் இழக்க நேரிட்டுள்ளது , நடப்பு லா லிகா சாம்பியனான ரியல் மாட்ரிட் தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அட்லெடிகோ மாட்ரிட் முதலிடத்திலும் , பார்சிலோனா ,ரியல் மாட்ரிஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அத்துடன் சாம்பியன்ஸ் லீக் அடுத்த சுற்று போட்டிகளில் அட்லான்டா அணியுடனான இரு போட்டிகளிலும் ரமோஸ் விளையாடமாட்டர் என்பது உறுதியாகியுள்ளது.
ரமோஸ் இல்லமால் ரியல் மாட்ரிட் விளையாடிய 10 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரமோஸ் இல்லாததது ரியல் மாட்ரிட் அணிக்கு மிக பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
34 வயதான செர்ஜியோ ராமோஸ் இந்த ரியல் மாட்ரிட் உடனான ஒப்பந்தம் நிறைவுக்கு வர இன்னும் 5 மாதங்களே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.