சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி விபரம் வெளியானது…!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்த வருடம் ழ நவம்பர் 4 ம் திகதி ஆரம்பிக்கும் இந்தத் தொடர் நவம்பர் 22ஆம் திகதி வரை லக்னோவில் நடைபெறவுள்ளது.

சையத் முஷ்டாக் அலி 2020/21 கோப்பையின் இறுதிப்போட்டியில் பரோட்டா அணியை வீழ்த்திய தினேஸ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி 2007 க்கு பின்னர் 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்த வருடத்திற்கான சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் 20 பேர் கொண்ட அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம் ☀️

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன், சந்தீப் வாரியர், சாய் கிஷோர், பாபா அபராஜித், நாராயண் ஜெகதீசன், முருகன் அஷ்வின், ஷாரூக் கான், ஹரி நிஷாந்த், சித்தார்த், கங்கா ஸ்ரீதர் ராஜு, எம் முகமத், ஜே கௌசிக், சஞ்சய் யாதவ், ஆர்.சிலம்பரசன், ஆர்.விவேக் ராஜ், சாய் சுதர்ஷன், சரவண குமார்.