உலக கிண்ண அணியில் அதிரடி மாற்றம் செய்தது பாகிஸ்தான்- 3 வீரர்கள் தீடீரென சேர்ப்பு..!

உலக கிண்ண அணியில் அதிரடி மாற்றம் செய்தது பாகிஸ்தான்- 3 வீரர்கள் தீடீரென சேர்ப்பு..!

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இருபதுக்கு இருப்பது உலக கிண்ண போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வருகின்ற 10 ம் திகதிக்குள் அணிகளில் மாற்றங்களை மேற்கொள்ளவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அணியை மாற்றியுள்ளது.

மேலதிக வீரராக இருந்த பாஹ்கர் ஸமான் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார், அதேநேரம் மொயின் கானின் மகனான அசாம் கான் அணியிலிருந்தே நீக்கப்பட, அவருக்குப் பதிலாக முன்னாள் தலைவரும் அனுபவ வீரருமான சார்ப்பிரஸ் கான் அணிக்குள் வந்துள்ளார்.

அதேபோன்று இளம் வீரரும் எதிர்கால பாபர் அசாம் எனவும் அழைக்கப்படும் ஹைதர் அலி அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ஆயினும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சோயிப் மாலிக் அணிக்கு அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.