கோலி, ரகானே சொதப்பல் பாண்டின் அதிரடி, புஜாராவின் நிதானம்- போராடும் இந்தியா
IND-154/4 -Tea
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் தேனீர் இடைவேளைக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது .
இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று தற்போது ஆட்டம் விடை நிறுத்தப்படும் வரை இந்தியா 4 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுள்ளது .
இன்றைய 3 ம் நாள் ஆட்டத்தில் போட்டியைத் தொடர்ந்த இங்கிலாந்து 578 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது .
இந்தியா சார்பில் ஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா ,கில் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் பொறுப்போடு ஆட வேண்டிய நிலையில் ஆட்டத்தை தொடர்ந்து கோலி மற்றும் ரஹானே ஆகியோர் விரைவாகவே வீழ்த்தப்பட்ட நிலையில் இந்தியா ஒரு கட்டத்தில 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை என்கின்ற தடுமாற்றமான நிலையில் இருந்தது .
ஆயினும் விக்கட் காப்பாளர் ரிஷாப் பாண்ட் 54 ஓட்டங்களையும் புஜாரா நிதானமாக 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்தியா தற்போது 154 ஓட்டங்களை பெற்றுள்ளது .
4 விக்கெட்டுகள் பறிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தொடர்ச்சியாக சென்னை டெஸ்டில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.