ஃபார்முலா 1 கர்ப்பந்தயத்தில் உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஒன்பதாவது சீசனில் மெர்சிடிஸுடன் இணைந்திருப்பார் என்று அந்த நிறுவனம் இன்று (08 ) தெரிவித்துள்ளது.
2013 சீசனுக்காக மெர்சிடிஸில் இணைந்ததிலிருந்து, ஹாமில்டன் ஆறு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார் – மைக்கேல் ஷூமேக்கருடன் அவரது ஏழு சாம்பியன்ஷிப் சாதனையையும் ஹாமில்டன் சமன் செய்துள்ளார்.
அவரது புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மெர்சிடிஸ் மற்றும் ஹாமில்டன் இணைந்து ஒரு தொண்டு பணியும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இரு தரப்பும் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட சந்தர்ப்பம் வாய்ந்ததாக மெர்சிடிஸ் அணியின் முதல்வர் டோட்டோ வோல்ஃப் தெரிவித்தார்.
“நாங்கள் எப்போதும் லூயிஸுடன் இணைந்திருக்கிறோம், நாங்கள் தொடருவோம், ஆனால் 2020 ஆம் ஆண்டில் எங்களுக்கு மிகவும் அசாதாரண ஆண்டாக காணப்பட்டது அதனாலே புதிய தொண்டுப் பணியிலும் இணைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
2021 எஃப் 1 சீசன் அடுத்த மாதம் பஹ்ரைனில் தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.