இந்தியாவுடனான டெஸ்ட் தோல்வி- திடீர் ஓய்வை அறிவித்த தென்னாபிரிக்க வீரர்..!

இந்தியாவுடனான டெஸ்ட் தோல்வி- திடீர் ஓய்வை அறிவித்த தென்னாபிரிக்க வீரர்..!

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்டது.

 இந்த போட்டியில் தோல்வியை தழுவிய பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டீ கொக் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

29 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் விடை கொடுக்கும் குயின்டன் டி காக் இன் தீர்மானம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 டெஸ்ட் போட்டிகளில் 3300 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்தியாவுடனான தோல்விக்குப் பின்னர் இவரது திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

ஆயினும் தனது பங்களிப்ப வைட் போல் கிரிக்கட்டில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.