சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பல்வேறு பிரிவுகளில் ஐசிசி விருதுகளை வென்றவர்களை அறிவித்து வருகின்றது, அந்தவகையில் பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான், ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC ஆடவர் T20I கிரிக்கெட்டர் 2021 இல் ஒரு மறக்கமுடியாத ஓட்டத்தை அனுபவித்தார்” என்று ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sheer Consistency, indomitable spirit and some breathtaking knocks ?
2021 was memorable for Mohammad Rizwan ?
More ? https://t.co/9guq9xKOod pic.twitter.com/6VZo7aaRIA
— ICC (@ICC) January 23, 2022
வனிந்து ஹசரங்கா, மொஹமட் ரிஸ்வான், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 2021 ஆம் ஆண்டுக்கான ICC ஆடவர் T20I ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே ரிஸ்வான் விருது வென்றுள்ளார்.
? 26 இன்னிங்ஸ்
? 1326 ரன்கள்
? 73.66 சராசரி
? ஒரு சதம், 12 அரைசதங்கள்
? 22 கேட்சுகள், 2 ஸ்டம்பிங்
முகமது ரிஸ்வான் 2021 ஆம் ஆண்டின் ICC ஆடவர் T20I கிரிக்கெட் வீரர் ஆவார் ✨