4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்_ மலிங்காவின் உலக சாதனையை சமன் செய்த ஜேசன் ஹோல்டர்..!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்தது.
ஏற்கனவே இடம்பெற்ற 4 ஆட்டங்களிலும் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று கொண்ட நிலையில் நேற்றைய போட்டி விறுவிறுப்பான ஒரு ஆட்டமாக அமைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணிக்கு இறுதி 4 பந்துகளில் 18 ஓட்டங்கள் தேவை என்கின்ற ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆயினும் இறுதி ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தின் வெற்றியை தடுத்து நிறுத்தினார்.
ஜேசன் ஹோல்டரின் நேற்றைய சாகசத்தின் மூலம் இங்கிலாந்து அணி இறுதியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான், இலங்கையின் லசித் மாலங்க ,அதேபோன்று அயர்லாந்து அணியின் சாம்பர் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து அதிசய உலக சாதனை பட்டியலில் ஜேசன் ஹோல்டர் நேற்றைய நாளில் இணைந்துகொண்டார்.
வீடியோ இணைப்பு ?
Here we go …
6 6 6 6 -> W W W W
Bishi voice n reactions ahhh ?#JasonHolder #EngvWi #WivEng #Holder pic.twitter.com/t1eUWHCJl8
— Diptiman Yadav (@diptiman_6450) January 31, 2022