பாகிஸ்தான் ,தென் ஆபிரிக்க T20 தொடர் இன்று ஆரம்பம் -புள்ளிவிபரம்.
பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணிக்கும் , பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்று ஆரம்பிக்கிறது.
இரு அணிகளுக்குமான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்று கைப்பற்றியுள்ள நிலையில், இன்று இருபதுக்கு இருபது தொடர் ஆரம்பிக்கின்றது.
இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 6 போட்டிகளில் பாகிஸ்தானும் , 8 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிகொண்டுள்ளன.
இறுதியாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2 தொடர்களை இழந்துள்ள நிலையில் இந்த தொடர் முக்கியம் பெறுகின்றது.
முதல் T20– இன்று 11 – கடாபி ஸ்டேடியம், லாஹூர் – 6.30 PM
2 வது T20 – பெப்ரவரி 13 –கடாபி ஸ்டேடியம், லாஹூர் – 6.30 PM
3 வது T20I– பெப்ரவரி 14 – கடாபி ஸ்டேடியம், லாஹூர் – 6.30 PM