பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் அடுத்து வர உள்ள நியூசிலாந்து அணியுடனான தொடரில் தனக்கு ஓய்வு வழங்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் டுவென்டி 20 தொடரில் தன்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் .
தனது மனைவி குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் மனைவிக்கு அருகில் இருக்க வேண்டிய தேவை இருப்பதனால் தனக்கு விடுப்பு வழங்குமாறு கோரியுள்ளார் .
எதிர்வரும் 22ஆம் திகதி பங்களாதேஷ் அணி நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கை கிடைத்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்தார்.
எனினும் இறுதி முடிவு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.