ஐபிஎல் 2022 சீசன் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் …!
ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஐபிஎல் 2022 சீசன் தொடர்பாக பின்வரும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது பதிப்பு, கோவிட்-19 தொற்று பரவுவதற்கான பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் விமானப் பயணத்தைத் தவிர்க்க, ஒரே மையத்தில் உயிர்-பாதுகாப்பான (Bio Bubble) சூழலில் விளையாடப்படும்,
போட்டிகள் மார்ச் 26, 2022 முதல் தொடங்கும் மற்றும் இறுதிப் போட்டி மே 29, 2022 அன்று நடைபெறும்.
மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச தரநிலை மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படும்.
பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும்.
மைதானங்களின்படி போட்டிகளின் விவரம் கீழே:
போட்டிகள் நடைபெறும் இடம்
மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள்
மும்பை – பிரபோர்ன் ஸ்டேடியம் (சிசிஐ) 15 போட்டிகள்
மும்பை – DY பாட்டீல் ஸ்டேடியம் 20 போட்டிகள்
புனே – எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகள்