ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு…!

பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன. 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி லாகூரில் தொடங்குகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி ஆகிய போட்டிகள் நடக்கவுள்ளன. மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய 3 நாட்களும் ராவல்பிண்டியில் 3 ஒருநாள் போட்டிகளும், ஏப்ரல் 5ஆம் தேதி டி20 போட்டியும் நடக்கவுள்ளன.

இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டன. பாபர் ஆசாம் தலைமையிலான இந்த அணியில் அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக், சௌத் ஷகீல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

பாகிஸ்தான் ஒருநாள் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், அப்துல்லா ஷாஃபிக், ஆசிஃப் அஃப்ரிடி, ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இஃப்டிகார் அகமது, இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜூனியர், சௌத் ஷகீல், ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.

பாகிஸ்தான் டி20 அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிஃப் அஃப்ரிடி, ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இஃப்டிகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.

#Abdh

எமது WhatsApp குழுவில் இணைந்திட ?

https://chat.whatsapp.com/ER4WK9EpBgMId0mwgUGo6G

Previous articleஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!
Next articleஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்…!