மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் இல் படைத்த புதுவித சாதனை ..!
15வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த 15ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை சந்தித்திராத அளவு மோசமான தோல்விகளை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக முதல் 5 ஆட்டங்களில் 2 தடவைகள் தோல்வியை தழுவிய அணியாக மும்பை இந்தியன்ஸ் மாறியது.
ஏற்கனவே முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அணிகளாக 3 அணிகள் இருக்கின்றபோது ( RCB 2019, Deccan 2012, Delhi 2013), மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் இரண்டாவது தடவையாகவும் (2014 & 2022) இந்த ஆண்டு தோல்விகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.