சம்பியன் லீக் கால்பந்து – அரை இறுதிக்கான அணிகள் தேர்வு, பெப் கார்டியாலோ மிகப்பெரும் சாதனை..!

சம்பியன் லீக் கால்பந்து – அரை இறுதிக்கான அணிகள் தேர்வு, பெப் கார்டியாலோ மிகப்பெரும் சாதனை..!

கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு கால்பந்து தொடரான சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு உரிய அணிகள் தேர்வாகி உள்ளன.

இதனடிப்படையில் ரியல் மாட்ரிட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, விலாரியல் ,ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை வெற்றி கொண்டன.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கழகங்களில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி  இம்முறை அரையிறுதி எட்டியது, இதன் மூலமாக மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளராக செய்யப்படும் கார்டியாலோ ஒரு மகத்தான சாதனையை தனதாக்கினார்.

கால்பந்தாட்ட வரலாற்றில் ஓர் அணியின் பயிற்சியாளராக 9 தடவைகள் அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்ற பெருமை அவரை சார்ந்துள்ளது.

பார்சிலோனா, பேர் முனிச் இப்போது மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளை இவ்வாறு அரை இறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

▪️ பார்சிலோனா (2009, 2010, 2011, 2012)
▪️ பேயர்ன் முனிச் (2014, 2015, 2016)
▪️ மான்செஸ்டர் சிட்டி (2021, 2022)

இதன்மூலம் ஒன்பது சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியை எட்டிய முதல் மேலாளர் என்ற பெருமையை பெப் கார்டியோலா பெற்றார்.

சாம்பியன் லீக் காலபந்து – அரையிறுதி அணிகள் ?

விலாரியல் -லிவர்பூல் ⚽️
மான்செஸ்டர் சிட்டி- ரியல் மாட்ரிட் ⚽️
#ChampionsLeague