IPL தொடரில் ஹர்திக் பாண்டியா அதிக ஓட்டங்களை கடந்து தன்னை மிஞ்சும் தருணத்தில் ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உடனடியாக ஆரஞ்சு தொப்பியை கழற்றி கால்சட்டையின் பின்னால் போட்டுக்கொண்டார்.
வியாழன் அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2022 போட்டியின் போது ஆரஞ்சு தொப்பி இரண்டு முறை கை மாறியது.
218 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்திருப்பவர் பட்லர், இருப்பினும் 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் 2022 இல் அதிக ரன்கள் எடுத்தவர்களில் பாண்டியா முதலிடத்தைப் பிடித்தார்.
போட்டியின்போது பிரசித் கிருஷ்ணா வீசிய 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் பாண்டியா பட்லரை பின்தள்ளி 223 ரன்கள் எடுத்தார்.
குறித்த சூழ்நிலையில் அதிக ஓட்டங்கள் பெறுபவருக்கான Orange Cap அணிவது மரியாதையற்றது என்பதை உணர்ந்து, தனது தொப்பியை கழற்றி கால்சட்டையின் பின்னால் மாட்டிக் கொண்டார்.
குறித்த பட்லரின் நடவடிக்கை இணையத்தை வைரலாக்கியது.
வீடியோ இணைப்பு ?
Such a gentleman Jos Buttler is .. pic.twitter.com/m42ATqL7tN
— That-Cricket-Girl (@imswatib) April 14, 2022
இதுதொடர்பில் ஜூவ்ராஜ் சிங்கும் டுவிட்டிரில் பட்லரை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
We still have gentleman in the game of cricket !!! @josbuttler ?? other players should learn from him specially team mates !!! #IPL2022 #RRvGT
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 14, 2022