இங்கிலாந்தில் கலக்கும் புஜாரா -சசெக்ஸ் அணியின் தோல்வியை தவிர்க்க உதவினார் …!

இங்கிலாந்தில் கலக்கும் புஜாரா -சசெக்ஸ் அணியின் தோல்வியை தவிர்க்க உதவினார் …!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் ஆட்டக்காரரான புஜாரா அண்மைக்காலமாக ஓட்டங்களைக் குவிக்க பெருமளவில் தடுமாறுகிறார்.

இதன் காரணத்தால் அண்மையில் இந்திய தேர்வாளர்களால் ஓரம்கட்டப்பட்டார் என்பது முக்கியமானது.

இந்தநிலையில் இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்றுவரும் பிஜாரா, இங்கிலாந்தின் பிரபலமான கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் ச்செக்ஸ் அணிக்காக அறிமுகமான புஜாரா ஆட்டமிழக்காமல் இரட்டை சதமடித்து அசத்தி அணியின் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.

இதன் காரணத்தால் டேர்பர்ஷைர் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சசெக்ஸ் அணி போட்டியை Draw செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, ஜனவரி, 2019 முதல் டெஸ்ட் சதம் அடிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 0, 16, 3, 53, 43 மற்றும் 9 என்று மோசமான பெறுதிக்குப் பிறகு அவர் கைவிடப்பட்டார். தொடரையும் இந்தியா 1-2 என இழந்தது.

34 வயதான புஜாரா, அஜிங்க்யா ரஹானேவுடன் ஐபிஎல்-க்கு முன் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கொண்ட சொந்தத் தொடரில் இருந்து ஒதுக்கப்பட்டார் என்பதும் முக்கியமானது.

Previous articleசென்னையின் தோல்விக்கு காரணம் என்ன- ஜடேஜா கொடுக்கும் விளக்கம்..!
Next articleமும்பை அணியின் தொடர் தோல்விகள்- மாலிங்க என்ன சொல்கிறார் தெரியுமா ?