தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்ட ஹரி வாகீசன்..!
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற LPL போட்டித்தொடரின் மிக வெற்றிகரமான அணியாக கருதப்படும் ஜப்னா கிங்ஸ் அணியின் Director ஆக செயல்படும் ஹரி வாகீசனை தேடி இன்னுமொரு பதவி வந்து சேர்ந்திருக்கிறது .
லைக்கா குழுமத்தின் முக்கிய உறுப்பினரான ஹரி வாகீசன் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் முதலாவது அத்தியாயத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினுடைய முகாமையாளராக இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டிகளில் அதே ஜப்னா அணி ஜப்னா கிங்ஸ் எனும் நாமத்தோடு போட்டிகளில் விளையாடி சாம்பியனானது.அந்த அணியின் பணிப்பாளராக வாகீசன் செயல்பட்டிருந்தார்.
இந்தியாவில் தமிழகத்தில் இடம்பெறுகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டித் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் லைகா கோவை கிங்ஸ் அணியின் இயக்குனராக/பணிப்பாளராக (Director) அதே நேரத்தில் ஆலோசகராகவும் (Mentor) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த கிரிக்கெட் முகாமைத்துவ ஆற்றலையும் மிகப்பெரிய கிரிக்கெட் பங்களிப்பையும் கொண்டிருக்கும் ஹரி வாகீசன் இலங்கையில் நடைபெறுகின்ற LPL போட்டிகள் மட்டுமல்லாது இப்போது கடல் கடந்து இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளிலும் முக்கியமான முக்கிய நபராக தொழில்படவுள்ளார்.
இலங்கை ஜப்னா கிங்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீர்ர்களுக்கு இதன்மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அன்பு வாழ்த்துக்கள் வாகீசன் ?