தென் ஆபிரிக்காவின் இந்திய சுற்றுலா -விபரம் வெளியீடு…!

 

2022 தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான போட்டி இடம்பெறவுள்ள இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது:

இந்தியாவிற்கான கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள 5 T20 போட்டிகளுக்கான மைதானங்களை இந்திய கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

twenty20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள இந்த முக்கிய தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்க உள்ளது.

ஜூன் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த போட்டிகள், ஜூன் மாதம் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முதல் T20 – ஜூன் 9 (டெல்லி)
இரண்டாவது T20I – ஜூன் 12 (கட்டாக்)
மூன்றாவது T20I – ஜூன் 14 (விசாகப்பட்டினம்)
நான்காவது T20 – ஜூன் 17 (ராஜ்கோட்)
ஐந்தாவது T20 – ஜூன் 19 (பெங்களூர்)